பெட்டாலிங் ஜெயா, ஏப்.3-
பண்டார் உத்தாமாவில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கட்டம் கட்டமாக சந்திப்புக் கூட்டம் நடத்தினார்.
கடந்த மார்ச் 30ஆம் தேதி நடந்த சந்திப்புக் கூட்டத்தில் டாமாய், பெர்மாய் மற்றும் புத்ரி அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
குடியிருப்பாளர்களுடான இச்சந்திப்புக் கூட்டங்களில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றில் ஒரு பகுதி ஜேஎம்பி பொறுப்பின் கீழ் உள்ளவை. ஆயினும், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண தமது தரப்பும் முயற்சிக்கும் என்றார் அவர்.
கடந்த ஆண்டு நடந்த மண் சரிவு சம்பவத்தில் பாதிப்படைந்த பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்பது பெர்மாய் மற்றும் பாயு புத்ரி ஆகிய அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எடுத்துரைத்ததாக அவர் சொன்னார்.
:உண்மையில், இது ஜேஎம்பி தரப்பின் பொறுப்பில் உள்ள விவகாரம் என்றாலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இப்பகுதியை சீரமைக்கும் செலவினத்தை நாங்கள் ஏற்க சம்மதிக்கிறோம்” என்றார் ஜமாலியா.


