SELANGOR

புவி நேரம் : 100 மறுசுழற்சி பைகளை எம்பிஎஸ்ஏ விநியோகித்தது

1 ஏப்ரல் 2019, 5:33 AM
புவி நேரம் : 100 மறுசுழற்சி பைகளை  எம்பிஎஸ்ஏ விநியோகித்தது

கோலாலம்பூர், ஏப்.1-

ஷா ஆலம் அளவிலான 60+ மணி நேர புவி நேரத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு 100 மறுசுழற்சி பைகளை ஷா ஆலம் மாநகராட்சி கழகம் (எம்பிஎஸ்ஏ) இலவசமாக வழங்கியது.

நெகிழப் பைகள் பயனீட்டை குறைப்பதோடு 2020ஆம் ஆண்டுக்குள் ஷா ஆலம் மாநகரத்தை கரியமிலவாயு குறைந்த பகுதியாக உருமாற்றும் இலக்கை அடைவதற்காகவும் இந்தப் பைகள் வழங்கப்பட்டதாக அதன் நிறுவனம் மற்றும் பொது தொடர்பு பிரிவின் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.

சுற்றுச் சூழல் தூய்மைக்கேட்டில் இருந்து பூமியைக் காப்பாற்றும் மலேசியாவுக்கான உலக இயற்கை நிதி அமைப்பின் (டபள்யூ டபள்யூ எஃப்) முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இரவு நேர சைக்கிள் பயணம், உள்ளூர் பிரபலங்களின் மேடை நிகழ்ச்சி, பசுமை திட்ட கண்காட்சி, உணவு வாகனங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ரிக்‌ஷா ஊர்வலம் போன்ற அங்கங்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தாக ஷாஹ்ரின் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.