NATIONAL

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டம் திருத்தப்படும்!

27 மார்ச் 2019, 7:30 AM
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டம் திருத்தப்படும்!

கோலாலம்பூர், மார்ச் 27-

கவனக் குறைவு காரணமாக வேலையிடங்களில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க 1994ஆம் ஆண்டு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாக மனித வள துறை துணை அமைச்சர் டத்தோ மாஃபோஸ் ஒமார் கூறினார்.

நடப்பில் உள்ள கட்டுமான துறை சட்டதிட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் செய்யும் பணியில் தற்போது வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா ஈடுபட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் அமலுக்கு வரும்போது கட்டுமானத் துறையைச் சேர்ந்த கட்டட கலைஞர்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குத்தகையாளர்கள் என அனைத்து தரப்பும் புதிய சட்டத் திருத்தங்களை கட்டாயமாகக் கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

புதிய திருத்தங்கள் அமலுக்கு வந்தவுடன் நடப்பில் உள்ள நடைமுறை வழிகாட்டிகளிலும் மாற்றம் ஏற்படும். இந்த நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை மலேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு (ஓஷிம்) உறுதி செய்யும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கட்டுமானத் துறையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பாப்பார் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அகமது ஹாசான் கேட்ட கேள்விக்கு டத்தோ மாஃபோஸ் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.