SELANGOR

2020 பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளைப் பெற எம்பிஎஸ்பி இணையத்தளம்

25 மார்ச் 2019, 2:19 AM
2020 பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளைப் பெற எம்பிஎஸ்பி இணையத்தளம்

சிப்பாங், மார்ச் 25-

சிப்பாங் மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலையை வலுப்படுத்துவதற்கு உரிய ஆலோசனைகளை மக்கள் வழங்குவதற்கு ஏதுவாக சிப்பாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்பி) 2020 பட்ஜெட் இணையத்தளத்தை தொடங்கியது.

தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்ற நடவடிக்கையின் தரத்தின் உயர்த்துவதே இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் என்று எம்பிஎஸ்பியின் நிறுவனப் பிரிவு மற்றும் பொதுத் தொடர்பு பிரிவு இயக்குநர் நோரேஹான் அமாட் கஸ்மான் தெரிவித்தார்.

சிப்பாங்கின் மேம்பாட்டுத் திட்டமிடலில் மக்கள் நேரடியாக பங்கேற்க இந்த “மக்களை மையப்படுத்தும்” பட்ஜெட் திட்டமிடல் நடவடிக்கை ஊக்குவிக்கும் என்றார் அவர்.

தேவையான ஆலோசனைகளை வழங்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, சிப்பாங்கை மேம்படுத்த நகராண்மைக் கழகத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு நல்குவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.