SELANGOR

இளைஞர்களுடன் அணுக்கமாக பழகுவீர் ! சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்

22 மார்ச் 2019, 3:48 AM
இளைஞர்களுடன் அணுக்கமாக பழகுவீர் ! சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 22-

சிலாங்கூர் மாநில இளைஞர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனைத் தொட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மாநிலத்தில் மக்கள் தொகையில் சுமார் 50 சதவிதம் இளைஞர்களாக இருப்பதைக் காட்டுகிறது.

எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் இளைஞர்களுடன் அணுக்கமாகப பழக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று இளைஞர், விளையாட்டு மற்றும் மனித மூலதன மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒஸ்மான் கூறினார்.

“புள்ளிவிபரப் பட்டியலின் படி மாநில வாக்காளர்களில் 50 விழுக்காட்டினர் இளைஞர்களாக உள்ளனர். எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனது துறை மீது அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்” என்று கைருடின் சொன்னார்..

மாநில சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் கைருடின் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

மேலும், 2018ஆம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கையின்படி 15க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இளைஞர்களாக வகைபடுத்தப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.