ஷா ஆலம், மார்ச் 22-
மூன்று வகையான பசுமை பரீட்சார்த்த மாதிரி திட்டங்களை மூன்று வெவ்வேறு ஊராட்சி மன்றங்கள் அமல்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அமலாக்க நடவடிக்கையில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி கழகம், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும் காஜாங் நகராண்மைக் கழகம் ஆகிய மூன்று ஊராட்சி மன்றங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று வீடமைப்பு மற்றும் நகர வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹனிஸா தால்ஹா கூறினார்.
இந்த ஆய்வின் முடிவைக் கொண்டு, திறந்த வெளி, பசுமை மற்றும் சமூக சீர்கேடுகளற்ற பாதுகாப்பான பகுதிக்கு ஏற்ற பசுமை பரீட்சார்த்த திட்டத்தை மாநில அரசு தேர்வு செய்யும் என்றார் அவர்.
தேர்ந்தெடுக்கும் பசுமை திட்டப் பகுதியில் சமய நடவடிக்கைகள் மற்றும் சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் வழி சமூகங்களுக்கிடையிலான இறுக்க நிலை குறைக்கப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


