NATIONAL

ரசாயனத் தூய்மைக்கேடு : தடுப்புக் காவலில் 9 ஆடவர்கள்

19 மார்ச் 2019, 7:57 AM
ரசாயனத் தூய்மைக்கேடு : தடுப்புக் காவலில் 9 ஆடவர்கள்

ஜோகூர் பாரு, மார்ச் 19-

பாசீர் கூடாங் ரசாயனக் கழிவு தூய்மைக்கேட்டிற்குக் காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்பது ஆடவர்களை போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இந்தத் தடுப்புக் காவல் வரும் சனிக்கிழமை வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கைதானவர்களில் இருவர் ஜோகூரைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுஸி ஹருண் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களை அடுத்த ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்திருக்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்றார் அவர்.

இவர்கள் அனைவரும் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் காற்றில் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தியதற்கான குற்றவியல் சட்டத்தின் 278 பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.