NATIONAL

3,000-லிருந்து, 200-ஆக குறைந்த மலாயா புலிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கப்படும்!

19 மார்ச் 2019, 2:38 AM
3,000-லிருந்து, 200-ஆக குறைந்த மலாயா புலிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கப்படும்!

கோலாலம்பூர், மார்ச் 17 :

முறையான பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தால், இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், மலாயா புலிகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

தற்போது, 200 மலாயா புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவற்றின் நிலைகள் பரிதாபத்திற்கு உரியதாகத்தான் உள்ளது என அவர் குறிப்பிட்டார் .

இதற்கிடையில்,  மலாயா புலிகளின் எண்ணிக்கையை பாதுகாக்க, மலேசிய ஆயுதப்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், இவர்களுடன் காவல் துறையினரும், மலேசிய வனத்துறையும் இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.

1950-ஆம் ஆண்டுகளில் சுமார் 3,000 மலாயாபுலிகள் நம் நாட்டில் இருந்ததாகக் கூறிய அமைச்சர்,தற்போது காடு அழிப்பு,வேட்டையாடுதல் போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளால் அவை முற்றிலுமாக அழிந்து போகும் நிலையில் இருப்பதாகக் கூறினார்.

மலாயா புலிகள் நம் நாட்டில் மட்டுமே காணக் கிடைக்கும் வன மிருகமாகும். புலி இனங்களிலேயே இவைஉடல் அளவில் சிறியதாகவும், இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்காகவும் விளங்குகிறது.

செய்தி : செல்லியல்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.