SELANGOR

சட்டவிரோத சரிவுப் பாதைகளை இடித்துத் தள்ளியது எம்பிஎஸ்ஏ

6 மார்ச் 2019, 5:26 AM
சட்டவிரோத சரிவுப் பாதைகளை  இடித்துத் தள்ளியது எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், மார்ச் 6-

கார் நிறுத்துமிடத்தையும் கட்டடத் தரையையும் இணைக்கும் வகையில் சிமெண்டைக் கொண்டு கட்டப்பட்ட 14 சரிவுப் பாதைகளை ஷா ஆலம் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஏ) இடித்துத் தள்ளியது. இவை யாவும் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டவையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்திற்காக தனது தரப்பு 6 அபராத அறிக்கைகளையும் 5 எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளதாக கழகத்தின் நிறுவனம் மற்றும் பொது தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது தெரிவித்தார்.

இந்த சரிவுப் பாதை நிர்மாணிப்பானது 133 ஆவது சாலை, கால்வாய் மற்றும் கட்டடச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது என்றார் அவர்.

எனவே, கார் நிறுத்துமிடத்தைத் தங்கள் வர்த்தக நடவடிக்கைக்காகப் பயன்படுத்த விரும்பும் கட்டட உரிமையாளர்கள் கார் நிறுத்துமிடத்தை முறையாக வாடகைக்கு எடுக்க விண்ணப்பிக்கும் படி அவர் அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.