SELANGOR

2018இல் சிலாங்கூரில் 9,196 புதிய வேலை வாய்ப்புகள்

22 பிப்ரவரி 2019, 7:27 AM
2018இல் சிலாங்கூரில் 9,196 புதிய வேலை வாய்ப்புகள்

ஷா ஆலம், பிப்.23:

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் மொத்தம் 9,196 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து சாதனங்கள், உணவு தயாரிப்பு மற்றும் ரசாயன துறை போன்ற துறைகளில் புதிய முதலீடுகளை மாநிலம் கவர்ந்ததால், இந்த வேலை வாய்ப்புகள் தோற்றுவிக்கப்பட்டன என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இதில் ஜப்பான், சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மேற்கொண்ட 8.3 பில்லியன் வெள்ளி முதலீட்டில் தொடங்கப்பட்ட 143 திட்டங்களும் அடங்கும் என்றார் அவர்.

உலகளாவிய பொருளாதார மந்த நிலையிலும் இந்த முதலீடுகளை மாநிலம் கவர்ந்ததற்கு இம்மாநிலம் முதலீட்டாளர்களுடன் கொண்டுள்ள நட்புறவான கொள்கையே முக்கிய காரணமாகும் என்று அமிருடின் சுட்டிக்காட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.