SELANGOR

அனைத்து இன மக்களின் நலன் மீதும் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது

17 பிப்ரவரி 2019, 1:17 AM
அனைத்து இன மக்களின் நலன் மீதும் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது

பூச்சோங், பிப்.18:

சிலாங்கூரில் சில பொறுப்பற்ற தரப்படுத்தினர் ஏற்படுத்தும் இன விவகாரங்களைப் புறந்தள்ளிவிட்டு அனைத்து இனத்தவரின் நலன்களைப் பேணுவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.

நாட்டின் கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிட்டது போல் அனைத்து இனத்தவரின் நலனுக்காக உழைக்க மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாக பரிவுமிக்க அரசாங்கம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் கூறினார்.

“வெறும் வார்த்தை ஜாலமாக அல்லாமல், உண்மையாகவே அனைத்து இன, சமய மக்களின் நலனைப் பேணும் மாநில அரசாங்கமாக சிலாங்கூர் திகழ்கிறது என்பதில் பெருமையடைகிறேன்” என்றார் அவர்.

ஒரு சில தரப்பினர் இன விவகாரங்களைத் தோற்றுவிக்க முயன்றாலும், அனைத்து இனத்தவரையும் அரவணைக்கும் கொள்கையில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

நேற்று இங்குள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 2019 பொங்கல் விழாவில் ஆற்றிய உரையில் அவர் மேற்கண்டவாறு பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.