NATIONAL

சமூக வலைத்தளங்களில் மட்டுமே பிரபலம் அம்னோவிற்கு நஜீப் ஒரு சுமையே

14 பிப்ரவரி 2019, 8:37 AM
சமூக வலைத்தளங்களில் மட்டுமே பிரபலம் அம்னோவிற்கு நஜீப் ஒரு சுமையே

ஷா ஆலம், பிப்.15:

சமூக வலைத்தளங்களில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு கிடைத்து வரும் ஆதரவும் வரவேற்பும் செமினி சட்டமன்றத் தொகுதியில் வரும் மார்ச் 2ஆம் தேதி நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவான வாக்குகளாக மாறும் என்று அர்த்தமாகாது.

ஏனெனில், அவரது சொந்த கட்சியினரே நஜீப்பை ஒரு சுமையாக கருதுகின்றனர் என்று டாரூல் ஏசான் கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகமது ரிட்சுவான் ஓஸ்மான் கூறினார்.

“மேலும், இவருடைய ஊழல் நடவடிக்கைகளே கடந்த 14ஆது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தன” என்பதை அவரது கட்சி உறுப்பினர்கள் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்” என்றார் அவர்.

‘போஸ்கூ’ என்ற பட்டப் பெயரில் சமூக வலைத்தளங்களில் நஜீப் பிரபலமாக இருக்கலாம். ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த தோல்விக்கு முக்கிய காரணகர்த்தாவான நஜீப்பை அக்கட்சியினர் இந்த இடைத்தேர்தலில் பிரச்சாரப் பீரங்கியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.