கோலாலம்பூர், பிப்.7:
ஒருங்கிணைந்த விவேகமான மூத்த குடிமக்களுக்கான நீண்ட கால பராமரிப்புத் திட்டத்தை வடிவமைப்பதற்காக ஆய்வு ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மூத்த குடிமக்கள் கொள்கையின் கீழ் நடப்பில் உள்ள தேசிய மூத்த குடிமக்கள் திட்டத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா இஸ்மாயில் கூறினார்.
“பல பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை பராமரிக்கத் தவறும் வேளையில் மேலும் சிலர் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் பெற்றோர்களைப் பராமரிக்க இயலாமல் இருக்கின்றனர்” என்று அவர் சொன்னர்.
“எனவே, சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு தண்டனை வழங்குவது இந்த விவகாரத்திற்கு சிறந்த தீர்வாகாது” என்றார் அவர்.