SUKANKINI

லீவர்பூல் அணிக்கு அடுத்த நிலையில் சிட்டி தொடர்ந்து முன்னணி

4 பிப்ரவரி 2019, 1:38 AM
லீவர்பூல் அணிக்கு அடுத்த நிலையில்  சிட்டி தொடர்ந்து முன்னணி

குளோபல், பிப்.4:

இங்கிலீஸ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் அர்செனலை 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் சிறப்பான முறையில் வென்றதன் வழி புள்ளிப் பட்டியலில் முன்னணி வகிக்கும் லீவர்பூல் அணிக்கு அடுத்த நிலையில்  மென்செஸ்டர் சிட்டி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

3 கோல்களை அடித்ததன் வழி செர்கியோ குன் அகுவேரோ மிகச் சிறந்த ஆட்டக்காரராக தோன்றியுள்ளதுடன் புள்ளிப்பட்டியிலில் லீவர்பூல் அணியுடனான வேறுபாட்டை மென்செஸ்டர் சிட்டி இரண்டாக குறைத்துக் கொண்டுள்ளது.

ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே பெனால்டி பகுதியில் அர்செனல் தற்காப்பு ஆட்டக்காரர்களிடம் இருந்து பந்தைப் பறித்து அய்மெரிக் லாபோர்ட் அடித்த பந்தை அகுவரோ தலையால் முட்டி கோலாக்கினார்.

எனினும், அடுத்த 10ஆவது ஆட்டத்தில் அர்செனலின் லோரெண்ட் கோஸ்செல்னி 1 கோலைப் போட்டு ஆட்டத்தை 1-1 என்று ஆட்டத்தை சமமாக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.