SELANGOR

விவேக மாநில திட்டத்தை வலுப்படுத்த சிலாங்கூர்-பண்டோங் ஒத்துழைப்பு!

29 ஜனவரி 2019, 4:09 AM
விவேக மாநில திட்டத்தை வலுப்படுத்த  சிலாங்கூர்-பண்டோங் ஒத்துழைப்பு!

ஷா ஆலம், ஜன.29:

2025 விவேக மாநிலமாகும் இலக்கை அடைவதற்கு உதவக்கூடிய இந்தோனேசியாவின் பண்டோங் மாநகருடனான தொடர்பை வலுப்படுத்த கடந்த வாரம் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அங்கு அலுவல் பயணம் மேற்கொண்டார்.

கெடுங் பாக்குவானின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஜாவா பாராட்டின் கவர்னர் மொசாம்மாட் ரிடுவான் கமிலுடன் பெட்டாலிங் ஜெயா மற்றும் பண்டோங் ஆகிய இரு நகரங்களும் 2016 ஆம் ஆண்டு முதல் கொண்டிருக்கும் ஒத்துழைப்பு குறித்து அமிருடின் விவாதித்தார்.

பெட்டாலிங் ஜெயா – பண்டோங் நகரங்களுக்கு இடையிலான வியூகப் பங்காளித்துவம் வழி கொண்டிருக்கும் தொடர்பு வரும் காலங்களில் தொடரவும் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தவும் இந்த பேச்சுவார்த்தை உதவுமென்று நம்பப்படுகிறது.

கிழக்காசிய வட்டாரத்தில் சிலாங்கூரை முக்கிய தளமாக உயர இந்த நடவடிக்கை நல்லதொரு தொடக்கம் என்று அமிருடின் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.