SELANGOR

எம்பிஎஸ்ஜே: சீனப் புத்தாண்டை முன்னிட்டு கழிவுப் பொருட்களை அகற்றும் இலவச சேவை!

23 ஜனவரி 2019, 3:18 AM
எம்பிஎஸ்ஜே: சீனப் புத்தாண்டை முன்னிட்டு கழிவுப் பொருட்களை அகற்றும் இலவச சேவை!

ஷா ஆலம், ஜன.23:

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 29 தொடங்கி பிப்ரவரி 8 வரையில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அங்குள்ள வீடமைப்பு பகுதிகளில் பெரிய அளவிலான கழிவுப் பொருள்களை இலவசமாக அகற்றும் சேவையை வழங்கவுள்ளது.

இந்த இலவச சேவை குறிப்பிட்ட கால அட்டவணைப்படி மட்டுமே வழங்கப்படும் என்றும் இக்காலக் கட்டத்திற்கு பின்னர் அந்த சேவை தொடராது என்றும் பெரிய நிறுவனம் மற்றும் வியூக நிர்வாகத் துறையின் துணை இயக்குநர் அஸ்ஃபாரிஸால் அப்துல் ரஷிட் கூறினார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதி மக்களின் விண்ணப்பங்களில் வரையறுக்கப்பட்ட அட்டவணைப்படி கழிவு பொருள் அகற்றும் சேவை வழங்கப்படும்.

கேடிஇபி தரப்பினர் கழிவுப் பொருட்களை கட்டம் கட்டமாக அகற்றுவதற்கு ஏதுவாக விண்ணப்பம் செய்த குடியிருப்பாளர்கள் அவரவர் வீடுகளுக்கு முன்புறம் ‘மொத்த கழிவு பொருள்’ தொட்டிகளை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த சேவைக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் குடியிருப்பாளர்கள் சுற்றுச் சூழல் நிர்வாகத் துறையுடன் 03-80263182, 03-80264363, 03-80267430, 03-80267431 மற்றும் 03-80267433. என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.