NATIONAL

முகமட் அடிப் மரண விசாரணை நாளை தொடங்கும்

17 ஜனவரி 2019, 7:27 AM
முகமட் அடிப் மரண விசாரணை நாளை தொடங்கும்

ஷா ஆலம், ஜன.17:

சுபாங் ஜெயா யூஎஸ்ஜே 25 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்தின் போது தாக்கப்பட்டதால் மரணமடைந்த தீயணைப்பு வீரர் அடிப் முகமட் காசிம் மரணம் மீதான புலன்விசாரணை நாளை மரண விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்.

முகமட் அடிப்புக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர், சவப்பரிசோதனை செய்தவர் உட்பட அனைத்து சாட்சிகளும் இந்த விசாரணையின் போது சாட்சியம் அளிப்பர் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் கூறினார்.

நாளை தொடங்கும் இந்த விசாரணையின் போது ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தீயணைப்பு அதிகாரிகளும் சாட்சியம் அளிக்கும் சாட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்றார் அவர்.

அங்கு நடந்த சம்பவம் குறித்து அவர்கள் சாட்சியம் அளிப்பர் என்றும் அடிப்பின் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.