SELANGOR

ஓஸிக்கு போலீஸ் வலைவீச்சு. தடுப்புக் காவலில் நால்வர்

8 ஜனவரி 2019, 4:28 AM
ஓஸிக்கு போலீஸ் வலைவீச்சு. தடுப்புக் காவலில் நால்வர்

ஷா ஆலம், ஜனவரி 8:

ஷா ஆலம் செக்சன் 7, ஜாலான் பிளம்பமில் உள்ள பிகே என் எஸ் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் கெ அடிலான் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் தியாகு மாரிமுத்துவை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை சிலாங்கூர் குற்றப் புலனாய்வு பிரிவு தேடி வருகிறது.

ரோஸிராம் எம்.தேவன் என்ற பெயர் கொண்ட அந்த சந்தேக நபர் கடைசியாக சிலாங்கூர், கிள்ளானில் பாடாங் ஜாவா தாமான் கருப்பையா என்ற முகவரியில் வசித்ததாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வு பிரிவு தலைவர் எஸ் ஏ சி ஃபட்சில் அகமட் கூறினார்.

“இந்தக் கொலை வழக்கில் தேடப்படும் அந்த நபர் குறித்து தகவல் அறிந்த பொது மக்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும்.”

தகவல் அறிந்தோர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது இந்த கொலை விசாரணையில் ஈடுபட்டுள்ள ஏ எஸ் பி விக்னேஸ் குமாரை 03-55202222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

இதுவரை, சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நால்வர் இன்று தொடங்கி 7 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.