NATIONAL

அனைத்துலக கடப்பிதழ் தொலைந்தால் ரிம 1200 அபராதம்

5 ஜனவரி 2019, 10:31 AM
அனைத்துலக கடப்பிதழ் தொலைந்தால் ரிம 1200 அபராதம்

கோலாலம்பூர், ஜனவரி 5:

எதிர் வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து விட்டாலோ அல்லது சேதப்படுத்தி விட்டாலோ  அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது.

இந்தப் புதிய நடைமுறை கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. முதல் முறையாக தங்கள் கடப்பிதழ்களை தொலைத்து அல்லது சேதப்படுத்திய மலேசியர்களுக்கு  400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது முறையாக மாற்றம் செய்பவர்களுக்கு 700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

இதற்கிடையில், 12 வயதிற்கும் குறைவான குழந்தைகள், 21 வயதிற்கும் குறைவான வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்குமுதல் முறையாக தங்கள் கடப்பிதழ்களை தொலைத்து அல்லது சேதப்படுத்தினால் 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும் இரண்டாவது முறையாக விண்ணப்பிப்பவருக்கு 600 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

மூன்றாவது முறையாக தங்கள் கடப்பிதழ்கள் தொலைந்து அல்லது சேதமடைந்திருந்தால்1,200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனவும்,12 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும், 21 வயதுக்கும் குறைவான வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு 1,100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாககுடிநுழைவு துறை, தங்கள் பயண ஆவணத்தைத் தொலைத்த அல்லது சேதப்படுத்தியதற்காக , மலேசியர்களுக்கு எவ்வித அபராதமும் விதித்ததில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.