NATIONAL

மனோகரனே கேமரன்மலை இடைத்தேர்தல் வேட்பாளர்

4 ஜனவரி 2019, 5:27 AM
மனோகரனே கேமரன்மலை இடைத்தேர்தல் வேட்பாளர்

கோலா லம்பூர், ஜனவரி 4:

கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பக்காததான் ஹராப்பான் வேட்பாளராக பகாங் ஜசெக துணைத் தலைவர் எம்.மனோகரனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை யாயாசான் அல் புக்காரியில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்களுடான சந்திப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் இக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.

“கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரே இந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளார்.”

“இந்த இடைத்தேர்தலில் இக்கூட்டணி வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம். அதில் இரச்னை ஏதும் இருக்காது.”

கடந்த 14ஆவது பொது தேர்தலின் போது இந்த தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா வேட்பாளர் டத்தோ சி சிவராஜ் 1954ஆம் ஆண்டு தேர்தல் விதியை மீறியதால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 4 ஆம் தேதி மனோகரன் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் நீதிமன்றம் அந்த தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்தது.

மேலும், வரும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ம.இ.கா. உதவித் தலைவருமான டத்தோ சி சிவராஜ் போட்டியிட தகுதியில்லை என்று கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.