SELANGOR

சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தொடர் மார்ச் 13இல் தொடங்கும்

3 ஜனவரி 2019, 4:51 AM
சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தொடர் மார்ச் 13இல் தொடங்கும்

ஷா ஆலம், ஜனவரி 3:

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 6ஆம் தவணைக்கான கூட்டத் தொடர் மார்ச் 18 தொடங்கி 29 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத் தொடரை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சூ லிம் கூறினார்.

இந்தக் கூட்டத் தொடரின் போது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் புதிய துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். பாயா லாராஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முகமட் கைருடின் ஓஸ்மான் சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு துறை மற்றும் மனித மூலதன மேம்பாட்டு துறையின் ஆட்சி குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த பதவி காலியாகியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலவன்ஸ் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் தாம் மாநில ஆட்சி குழு கூட்டத்திற்கு கடிதம் அனுப்பவிருப்பதாக அவர் சொன்னார்.

அதேவேளையில், சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 52 இல் இருந்து 54ஆக அதிகரித்துள்ளது குறித்தும் தாம் அக்கடிதத்தில் குறிப்பிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.