SELANGOR

8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை

12 டிசம்பர் 2018, 9:03 AM
8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை
8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை

ஷா ஆலம், டிசம்பர் 12:

எதிர் வரும் டிசம்பர் 15-இல் நடக்கவிருக்கும் சிலாங்கூர் மாநில அளவிலான கிருஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் பொது மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் படி நினைவுறுத்தப் பட்டுள்ளது. காஜாங் நகராண்மைக் திடலில் நடைபெறும் என திட்டமிடப்பட்டு உள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் சாலை நெரிசலை தவிர்க்க முடியும் என்று சிலாங்கூர் மாநில  சுற்று சூழல், பசுமை தொழில் நுட்பம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளர் நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சான் நினைவு படுத்தினார்.

பொது மக்கள் ஏறக்குறைய 5000 முதல் 8000 பேர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்பதாக கூறினார்.

"கிருஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்  வருகையாளர்கள்  பொது போக்குவரத்தான எம்ஆர்டி மற்றும் பேருந்தை பயன்படுத்தி சாலை நெரிசலை குறைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்த வேளையில், நிகழ்ச்சிக்கு வருகை புரியும் பொது மக்கள் வாகன நிறுத்துமிடம் கிடைக்காமல்  அவதிப் படுவதை மாநில அரசாங்கம் விரும்பவில்லை. மேலும், வாகன நிறுத்துமிடம் மிக தூரமாக இருப்பதனால் வருகையாளர்களுக்கு சங்கடங்கள் ஏற்படும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.