ஷா ஆலம், நவம்பர் 23:
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் வழங்கிட மாநில அரசாங்கம் முன் வந்திருப்பதாக மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
மாநிலத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்க செய்த போது அவர் இதனை தெரிவித்தார்.
வெ.34.53 மில்லியன் மதிப்பிலான இந்த போனஸ் டிசம்பர் 20ஆம் தேதி வழங்கப்படும் எனவும் கூறிய மந்திரி பெசார் அரசு ஊழியர்கள் மேலும் சிறப்பாக தங்களின் சேவையினை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த போனஸ் அமைவதாக மேலும் கூறினார்.
சிலாங்கூர் மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து நனி சிறப்புடன் செயல்படும் அரசு ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் இந்த போனஸ் அதிகரிக்கப்படும் எனவும் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்.


