SELANGOR

பெடுலி சேஹாட் மற்றும் கீஸ் அட்டை திட்டங்கள் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்றுள்ளது

12 நவம்பர் 2018, 6:58 AM
பெடுலி சேஹாட் மற்றும் கீஸ் அட்டை திட்டங்கள் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்றுள்ளது

ஷா ஆலம், நவம்பர் 12:

ஜனவரி 2018 வரை பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தில் 362,000 குடும்பங்கள் பதிந்த நிலையில் சுமார் 1.45 மில்லியன் மக்கள் இதன் மூலம் பயன் அடைய இருப்பதாக செல்கேட் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நூர் இஷாம் முகமட் கௌத் கூறினார். மாநில அரசாங்கத்தின் இலக்கான 250,000 குடும்பங்களை இது தாண்டி உள்ளது என்று விவரித்தார். மாதந்தோறும் ரிம 3.3 மில்லியனை இழப்பீடு தொகையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

" கடந்த ஜனவரி தொடங்கி இன்று வரை 628,000 விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். இது வரையில் சுமார் ரிம 32.2 மில்லியன் இழப்பீடு தொகையாக வழங்கியுள்ளோம். இதன்  அடிப்படையில் மாதந்தோறும் ரிம 3.3 மில்லியனை செல்கேட் கோப்ரேஷன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் தனியார் மருந்தகங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது," என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.

இதனிடையே அன்புத் தாய் விவேக சிலாங்கூர் அட்டை திட்டத்தில் (கீஸ்)  இது வரை 39,448 மகளிர் பதிந்த நிலையில் மாநில அரசாங்கத்தின் இலக்கான 40,000-ஐ விரைவில் அடையும் என்று நூர் இஷாம் தெரிவித்தார். ஜனவரி 2018 தொடங்கி இன்று வரை கீஸ் அட்டை திட்டத்திற்கு ரிம 48.7 மில்லியனை செல்கேட் கோப்ரேஷன் வழங்கி உள்ளது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.