NATIONAL

சுதந்திரம்: நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கும் என்று அஸ்மின் நம்பிக்கை

30 ஆகஸ்ட் 2018, 6:53 AM
சுதந்திரம்: நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கும் என்று அஸ்மின் நம்பிக்கை
சுதந்திரம்: நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கும் என்று அஸ்மின் நம்பிக்கை

ஷா ஆலம், ஆகஸ்ட் 30:

மலேசிய நாட்டின் 61-வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாடும் வேளையில் பொருளாதார விவகார அமைச்சு மலேசிய பொருளாதாரம் தொடர்ந்து வலுவான நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், சரிசமம் இல்லாத மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, மக்களிடையே வருமான இடைவெளி, இளையோரின் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவை அமைச்சு தீவிரமாக செயல்பட்டு களையும் என்று உறுதி படுத்தினார்.

ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு சுபிட்சமாக இருக்க பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தால் தீய சக்திகளிடம் இருந்து நாடு காப்பாற்றப்படும் என்று பொருளாதார விவகார  அமைச்சரின் சுதந்திர தினச் செய்தியில் இவ்வாறு கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.