SELANGOR

மக்கள் பிரச்னையை களைவதே எங்களின் மகத்தான சேவை – சரவணன்!!

23 ஆகஸ்ட் 2018, 6:51 AM
மக்கள் பிரச்னையை களைவதே எங்களின் மகத்தான சேவை – சரவணன்!!

செர்டாங், ஆகஸ்ட் 22:

மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதும்,அப்பிரச்னைக்கு தீர்வு காண்பதுமே எங்களின் முதன்மை சேவையும் கடமையும் என்கிறார் செர்டாங் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சமூக சேவையாளர் திரு.ப.சரவணன்.

வசதியற்றவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவதும் ஏழ்மை நிலை மக்களின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்குவதையும் இலக்காக கொண்டு செயல்படும் சரவணனும் அவரது சகாக்களும் செர்டாங் வட்டாரத்தில் மாபெரும் உருமாற்றத்தை உருவாக்குவதே தலையான கடமையாகவும் கருதி மக்கள் பணியில் தங்களை ஈடுப்படுத்தியுள்ளனர்.

இவ்வட்டாரத்தில் மக்கள் எதிர்நோக்கும் குடியுரிமை பிரச்னை,பிறப்புப் பத்திரம்,சமூகநல சிக்கல்கள்,ஏழ்மை நிலை,கல்வி சார்ந்த் பிரச்னைகள் என மக்கள் எதிர்நோக்கும் ஒவ்வொரு பிரச்னைகளையும் நன்முறையில் ஆராய்ந்து தேவையான உதவிகளை நிறைவாக செய்து வருவதாகவும் ஒவ்வொரு நாளும் மக்கள் தங்களின் பிரச்னைகளுக்காக தங்களை அணுகுவதாகவும் அதற்கு நன்முறையில் விவேகமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளையில்,தாங்கள் மேற்கொள்ளும் மக்கள் பிரச்னைகளுக்கு மாநில அராசாங்கத்திடமிருந்தும் அதன் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன் வரவேற்பும் ஆதரவும் கிடைப்பதாகவும் அதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வினை ஏற்படுத்துவதும் எளிதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும்,மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்காற்றுவதாகவும் அத்திட்டங்கள் மக்களிடையே சென்றடைவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் தாமும் தனது சகாக்களும் ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உதவிகள் தேவைப்படும் இவ்வட்டார மக்கள் எண்.3-3 இரண்டாவது தளம்,ஜாலான் 18/22 A,தாமான் ஸ்ரீ செர்டாங் பகுதியில் இயங்கும் சேவை மையத்தை தாராளமாக அணுகலாம் என்றும் 03 – 8958031 எனும் எண்ணிலும் தொடர்புக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.