ஷா ஆலம், ஜூலை 25:
மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி ஒரு சிறந்த மக்கள் சேவையாளர் மட்டுமில்லாமல் மக்களின் மீது அக்கறை கொண்டவர் என்ற முத்திரையை பதித்துள்ளார் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். இதற்கு முன்பு ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை மாநில அரசாங்கத்திடம் கொண்டு வந்தது மறக்க முடியாது என்று உறுதி படுத்தினார்.
" சுஹாய்மி மக்களின் மீது அக்கறை கொண்ட தலைவராக நம்மை விட்டு சென்றுள்ளார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசாங்கத்திடம் போராட்டம் நடத்துவார். சந்திப்பு கூட்டத்தில் கடுமையாக குரல் கொடுப்பார்," என்று சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தல் வேட்பாளர் முகமட் ஸாவாவி அமாட் முக்னியை ஆதரித்து தாமான் ஸ்ரீ அண்டாலாஸில் இவ்வாறு பேசினார்.



