ஷா ஆலம்,ஜூலை22:
நாட்டின் உற்பத்தி 5.5 - 6.0 விழுகாட்டை எட்டும் என நம்பிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அஃது பேங்க் நெகாராவின் நிகருக்கு ஒப்ப இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் வெளிப்படையான பொருளாதார திட்டம் உலக வர்த்தக சூழலில் பெரும் பங்காற்றுவதோடு அஃது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் பொருளாதாரத்தை 5.0 விழுகாட்டுக்கு வரும் ஆண்டுகளில் உயர்த்திடும் என்றும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
கடந்தாண்டில் நாட்டின் முதலீடு 12.6 விழுகாடு இருந்ததாகவும் அஃது வெ.3.2 டிரியனை எட்டியதாகவும் கூறிய நிதி அமைச்சர் ஆசிய நிலையில் வர்த்தக சந்தையை வலுப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.உள்நாட்டு வர்த்தகம் மந்தமாக இருந்த்காலும் ஆசிய சந்தை நன்நிலையில் இருப்பதாகவும் அஃது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவும் என்றார்.
கோலாலம்பூர் வர்த்தக பங்கு சந்தை 1.7 விழுகாட்டை தொட்டிருந்தாலும் சிங்கப்பூர்,ஜகர்த்தா,பேங்கோக்,ஹங்கோங் மற்றும் சங்ஹாய் ஆகிய பங்கு சந்தைகளோடு ஒப்பிடுகையில் நாட்டின் பங்கு சந்தை வலுவாகவே இருப்பதாக மேலும் அவர் கூறினார்.


