போர்ட் கிள்ளான், ஜூலை 15:
பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) மற்ற மாநிலங்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்படுத்தும் நடவடிக்கையை கண்டு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி பெருமிதம் கொண்டார். மேலும், மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை செயல்படுத்த மாநில தலைமையகத்திற்கு வருகை தரும்படி அறைகூவல் விடுத்தார்.
" சிலாங்கூர் மாநிலம் ஐபிஆர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றதால் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. 40-க்கும் மேற்பட்ட ஐபிஆர் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். அண்மையில், ஜோகூர் மாநில அரசாங்கத்தினர் சிலாங்கூர் மாநில அதிகாரிகளிடம் இலவச குடிநீர், அன்புத் தாய் விவேக சிலாங்கூர் அட்டை (கீஸ்) மற்றும் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் போன்ற திட்டங்களை பற்றி கேட்டறிந்து சென்றனர்," என்று தாமான் பண்டாமாரன் பெர்மாய்யில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.



