ஷா ஆலாம்,ஜூலை13:
நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் படுமோசமான தோல்வியை சந்தித்த அம்னோ நடப்பில் அதன் இலக்கை உணராமல் நகர்ந்துக் கொண்டிருப்பதாக அதன் முன்னாள் இளைஞர் பகுதி தலைவர் கைரி ஜமாலூடின் தெரிவித்தார்.
நடப்பில் அம்னோ சாலையின் முந்தந்தியில் நிற்பதாகவும் அஃது சாலையின் மையத்திற்கு செல்லப் போகிறதா அல்லது வலதுபுறம் போகப்போகிறதா எனும் முடிவை எடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாகவும் தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்திருந்தார்.
ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அம்னோ தனது கவனத்தை வலது புறம் திருப்பினால் தற்காலிக ஆரவாரம் கிடைக்கலாம்.ஆனால்,மீண்டெழுவதற்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் எட்டலாம் என்றார்.
ஆனால்,சாலையின் மையத்தை தேர்வு செய்வதே சிறப்பு.அஃது அவ்வளவு எளிதல்ல.அடிமட்ட மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தல் தோல்விக்கு பின்னர் அம்னோ என்ன செய்தது என கேள்வி எழுப்பிடும் கைரி இன உணர்ச்சியை பேசி முன்னாள் கட்சி தலைவருக்கு நன்கொடை வசூல் செய்கிறது.இது தவறில்லைதான்.ஆனால்,புதிய அம்னோ என்பது மீண்டும் பழைய தவறுகளை செய்ய ஆர்வம் காட்டக்கூடாது என்றார்.
நாம் மக்களின் உணர்வுகளை அறிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அதனை முறையாக மேற்கொள்ள வேண்டும்.நாம் மீண்டும் உயிர்த்தெழுவதற்கு அஃது பெரும் பங்காற்றும் என்றார்.
மேலும்,இன்னமும் அம்னோ தலைவர்கள் இனவாதம் பேசிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.அஃது கட்சியின் நிலைமையை மோசமான சூழலுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்த கைரி ஜமாலூடின் நாட்டின் 15வது பொதுத் தேர்தலிலும் மலாய்காரர் பெருமை பேசியும் இனவாத சிந்தனையை முன் வைத்தும் மலாய் அல்லாதவர்களை உயர்பதவியில் நியமனம் செய்வது குறித்தும் பேசிக் கொண்டிருந்தால்
புத்ராஜெயாவை கைப்பற்றும் கனவை நாம் மறந்துவிட வேண்டியதுதான் என்றும் கைரி எச்சரித்தார்.


