சுங்கை கண்டிஸ், ஜூலை13:
கெ அடிலான் கட்சி தேர்தல் போட்டியிடுவதா இல்லையா என்பதில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி வெளிப்படுத்த மறுத்து விட்டார்.
கட்சி தேர்தலில் போட்டியிடுவதை காட்டிலும் சிலாங்கூர் மாநில ஆட்சியில் கவனம் செலுத்துவதே விவேகம் என்றார்.புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தனக்கு நடப்பில் மாநில வளர்ச்சியும் மக்கள் மேம்பாடும் முதன்மையாக இருப்பதாகவுன் கூறினார்.
மாநிலத்தை நன்முறையில் வழிநடத்துதல்,திட்டங்களை மேற்கொள்ளுதல் என தன் கடமை விரிந்துக் கொண்டிருக்கும் நிலையில் கட்சிப் பதவிக்கு போட்டியிடுவதற்கு இன்னும் காலம் இருபதாக அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில்,முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தொடர்ந்து துணைத்தலைவருக்கு போட்டியிட வேண்டுமா அல்லது வேறு பதவிக்கு போட்டியிட வேண்டுமா என எழுப்பிய கேள்விக்கு அஃது அஸ்மின் அலியை சார்ந்தது என்று பதிலளித்தார்.


