கிள்ளான்,ஜூலை 10:
கிள்ளானில் பிரசித்திப் பெற்ற 100 ரௌண்டபோர்ட் சாலை புதுபிக்கப்பட்ட பின்னர் புதிய பொழிவினை பெற்றதோடு கிள்ளான் நகருக்கு மேலும் அழகு சேர்த்திருப்பதாக கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமாட் யாசிட் பிடின் தெரிவித்தார்.
சம்மதப்பட்ட சாலையை வடிமைத்து புது பொழிவினை ஏற்படுத்துவதற்கு சுமார் வெ.500,000ஐ செலவிட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.பசுமை,இயற்கை மற்றும் அழகு எனும் இலக்கில் அஃது உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
புது மொழிவையும் மேம்பாட்டையும் கொண்டிருக்கும் இந்த சாலை மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் தனித்துவமான சிறப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.
இதனை மேம்படுத்தவும் புதிய தோற்றத்தை கொடுக்கவும் "ஜிம்" நிறுவனம் பெரும் பங்காற்றியதாக நினைவுக்கூர்ந்த அவர் பிற கார்ப்ரெட் நிறுவனங்களும் இம்மாதியான செயல்பாடுகளுக்கு முன் வரவேண்டும் என்றார்.
அதேவேளையில்,பர்க்கிலி ரௌண்டபோர்ட் சாலையை 99ஸ்பிட்மார்ட் பராமரிக்க தத்தெடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
இந்த 100 ரௌண்டபோர்ட் சாலை "ஜிம்" நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அஃது 10 ஆண்டுக்கு நீடிக்கும் எனவும் கூறிய அவர் ஓராண்டுக்கு சுமாத் அதன் பராமரிப்பு செலவான வெ
30,000ஐ "ஜிம்" நிறுவனமே ஏற்றும் கொள்ளும் என்றார்.
