SELANGOR

முதலீடுகளில் சிலாங்கூர் மாநிலம் முன்னனி வகிக்கிறது

10 ஜூலை 2018, 6:31 AM

ஷா ஆலாம்,ஜூலை10:

நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

 

மாநிலத்தின் முதலீடு, தொழிற்துறை,சிறு மற்றும் நடுத்தர வாணிப துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கீம் இதனை பெருமிதமாக கூறினார்.

 

மாநிலத்தின் முதலீடு வருமான சிறந்த நிலைக்கு தொடர்ந்து முன்னேறுவதாக கூறிய அவர் முதலீட்டின் வருவாய் வெ.5.59 பில்லியனை எட்டியதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,சிலாங்கூர் மாநிலம் கடந்த 2017இல் 202 திட்டங்களுக்கு ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கிய நிலையில் அந்த வறுவாய் கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவித்தார்.இதில் வெ.3.43 பில்லியன் உள்நாட்டு முதலீடு என்றும் வெ.2.16 பில்லியன் அந்நியநாட்டு முதலீடு என்றும் விவரித்தார்.

 

மலேசிய முதலீடு மேம்பாட்டு வாரியம் (மிடா) வெளியிட்ட முதல் காலாண்டின் புள்ளி விவரத்தின் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து முதல்நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.