NATIONAL

ஊழலை எதிர்க்கொள்வது தற்போது அவ்வளவு எளிதல்ல

10 ஜூலை 2018, 4:51 AM
ஊழலை எதிர்க்கொள்வது தற்போது அவ்வளவு எளிதல்ல

ஷா ஆலாம்,ஜூலை10:

கடந்தக்காலங்களோடு ஒப்பிடுகையில் நடப்பில் ஊழலுக்கு எதிராய் களம் காண்பது என்பது மிக எளிதானதல்ல என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

 

பதவியை வைத்துக் கொண்டு அதனை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிவதை தடுக்கவும் அதனை கையாள்வதும் 1981ஐ காட்டிலும் தற்போதைய சூழலில் அஃது மிகவும் சிரமானது என்றும் அவர் கூறினார்.

 

நாட்டின் பிரதமராக 37 ஆண்டுகளுக்கு முன்னர் பதவி ஏற்ற போது நாடு மிகவும் தூய்மையாகவும் ஊழலும் லஞ்சமும் ஆளுமைக் கொள்ளாமல் இருந்ததாக கூறிய துன் மகாதீர் நடப்பில் அச்சூழல் நாட்டில் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

மேலும்,நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் நாட்டில் லஞ்சம் ஊழல் ஆகியவை பெரும் அளவில் ஊருடுவ வழி செய்யும் வகையில் "பணம்தான் ராஜா" எனும் நிலையை உருவாக்கி விட்டதாகவும் அதனால் அரசு கேந்திரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காண்பித்தார்.

 

ஊழலில் ஈடுபடுட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுவோரை நாம் உடனடியாக நீக்கிவிட முடியாது.அதனை நாம் நன்கு ஆராய வேண்டும்.பின்னர் விவேகமாய் முடிவெடுக்கவும் வேண்டும் என்றார்.அனைவரையும் நீக்கிவிட்டால் நாம் தொடர்ந்து ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் போகும்.இதில் அவசரம் காட்டாமல் விவேகமாய் நாம் கையாள வேண்டும்.

 

மலேசிய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் ஊழலுக்கு எதிரான நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

 

இந்நிகழ்வில் துன் மகாதீர் உரையாற்றிய பின்னர் அவரது 93வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் ஹராப்பான் அரசாங்கத்தின் சுமார் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்வில் பிறந்தநாள் இலக்காக எதை கொண்டுள்ளீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது "ஊழலை துடைத்தொழிக்க ஊடகம் பெரும் பங்காற்றும்" என நம்புவதாக கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.