NATIONAL

சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தல்: எஸ்பிஆர் நடைமுறைகளை மேம்படுத்தி உள்ளது

9 ஜூலை 2018, 6:24 AM
சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தல்: எஸ்பிஆர் நடைமுறைகளை மேம்படுத்தி உள்ளது
சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தல்: எஸ்பிஆர் நடைமுறைகளை மேம்படுத்தி உள்ளது

புத்ரா ஜெயா, ஜூலை 9:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) எதிர் வரும் ஆகஸ்ட் 4-இல்  சுங்கை கன்டிஸ் (என்49) சட்ட மன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சில புதிய வழிமுறைகளை அமல்படுத்த இருக்கிறது என்று எஸ்பிஆரின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஓத்மான் மாமூட் கூறினார். எஸ்பிஆர் கூடுதலாக இரண்டு அறைகளை மூத்த குடிமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றார். மேலும், வாக்களிக்க 30 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.

" வாக்களிக்கும் கால அவகாசம் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மாலை 5 மணிக்கு வாக்களிக்கும் மையங்கள் மூடப்பட்டது. இந்த கூடுதல் வாக்களிக்கும் கால அவகாசம் பொது மக்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறிந்து செயல்படுத்தப் படுகின்றது," என்று தமது அறிக்கையில் ஓத்மான் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.