NATIONAL

சிறார் ஆணையம் அமைக்க வேண்டுகோள்

3 ஜூலை 2018, 3:50 AM
சிறார் ஆணையம் அமைக்க வேண்டுகோள்

கோலாலம்பூர்,ஜூலை03:

நாட்டில் சிறார் ஆணையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.சிறார் தொடர்பிலான விவகாரங்கள் மற்றும் சிறார் திருமணம் உட்பட பல்வேறு விவகாரங்களை ஆராய்வதற்கு இஃது மிகவும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த வேண்டுகோளை நாட்டின் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கேஸா முன் வைத்தார்.மேலும்,அந்த ஆணையத்திற்கு தலைமையேற்பவர் சிறார் சட்டம் மற்றும் பாலியல் சட்டம் 2017இல் இருக்கும் குறைகளை களைந்து சுயட்சையாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் ஒருவர் அதற்கு தலைமையேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்,மேலும்,சிறார்களுக்குகான நீதி அவர்களுக்கான நியாயம் கிடைத்திடலில் அவர் தனித்துவமாகவும் இயங்கிட வேண்டும் என்றார்.

நாட்டில் சிறார் திருமணத்திற்கு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இஸ்லாமிய ஆண்கள் சுமார் 10,240 பேர் விண்ணப்பம் செய்த வேளையில் இஸ்லாம் அல்லாத ஆண்கள் சுமார் 7719 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.அவர்கள் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்களை திருமணம் செய்ய இவ்விண்ணப்பத்தை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல் மிகவும் அதிர்ச்சியானது.இதனை இப்படியே நாம் விட்டுவிட முடியாது.இதனை நாம் கடுமையான ஒன்றாக கருத்திட வேண்டும் என்றும் கூறிய அவர் சிறார்களின் நலனை நாம் பாதுகாக்க வேண்டும்.சிறார்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுப்பதோடு இது குறித்த விழிப்புணர்வையும் நாம் ஆழமாய் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் அண்மையில் 41 வயது ஆடவர் 11 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பில் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இனியும் தொடர்ந்து இம்மாதிரியான நடவடிக்கைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட ஜோர்ஜ் வயது குறைந்த திருமணங்களுக்கு எதிராக அரசாங்கம் ஆக்கப்பூர்வமான மற்றும் விவேகமான நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.அதேவேளையில்,சிறார் சட்டங்களின் வாயிலாக சிறார் நலனை காக்கவும் தூரநோக்கு நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறினார்.

வயது குறைந்த அல்லது சிறார் திருமணத்தின் மூலம் அச்சிறுமி மனநிலையிலும் உடல்நிலையிலும் பலவேறு பாதிப்புகளை எதிர்நோக்கும் அதேவேளையில் பாலியல் மற்றும் வன்கொடுமைகளுக்கும் ஆளாக நேரிடுவதாகவும் இஃது பெரும் சிக்கலான ஒன்று எனவும் ஜோர்ஜ் மேலும் விவரித்தார்.சிறார் திருமணம் இன்றைய சூழலில் நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்னை என்றும் அவர் வர்ணித்தார்.

அனைத்து சிறார்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பில் ஐயக்கிய நாடுகள் கூட்டமைப்பின் இலக்கை மலேசியாவும் வரவேற்று அதற்கான தனித்துவ இலக்கை ஆக்கப்பூர்வமாக நகர்த்திடும் மலேசிய அரசு சிறார் உரிமைக்கு முதன்மை அளிக்கும் வகையில் சிறார் திருமணத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில்,நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா நாட்டில் அன்மையி நடைபெற்ற 41 வயது ஆடவருக்கு 11 வயது சிறுமிக்குமான திருமணம் செல்லாது என்பதை வரவேற்பதாக கூறிய ஜோர்ஜ் சிறார் திருமணம் குறித்த விழிப்புணர்வு நாட்டு மக்களிடையே மேலோங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.