NATIONAL

சிலாங்கூரில் நீர் விவகாரம் தீர்க்கப்படும் – அஸ்மின் அலி உத்தரவாதம்

2 ஜூலை 2018, 7:17 AM
சிலாங்கூரில் நீர் விவகாரம் தீர்க்கப்படும் – அஸ்மின் அலி உத்தரவாதம்

சா ஆலாம்,ஜூலை03:

சிலாங்கூரில் நிலவி வரும் நீர் விவகாரம் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் உட்கட்டமைப்பு விரைவி ஆராயப்பட்டு அப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மாநிலத்தையும் புத்ரா ஜெயாவையும் வெவ்வேறு அரசாங்கங்கள் ஆட்சி செய்த காரணியத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் பெரும் இக்கட்டான நிலை நிலவியதாக கூறிய அவர் தற்போது மாநில அரசாங்கமும் புத்ராஜெயாவும் நம்பிக்கை கூட்டணி அரசின் கீழ் இருப்பதால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது எளிதென்றார்.

பொருளாதார விவகாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சிலாங்கூர் மற்றும் லெம்பா கிள்ளான் வட்டார மக்களின் நன்மைக்காக இதனை விரைந்து மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.இதற்கு முந்தைய மத்திய அரசாங்கம் இவ்விவகாரத்தில் மாநில அரசிற்கு நன்முரையிலான ஒத்துழைப்பினை வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காண்பித்த அஸ்மின் அலி நடப்பு மாநில மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி மற்றும் பிரதமர் துன் மகாதீர் ஆகியோருக்கு இடையிலான அன்மைய சந்திப்பு இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விரைந்து இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு சிலாங்கூர் வாழ் மக்கள் இப்பிரச்னையை வருங்காலங்களில் எதிர்நோக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்த அஸ்மின் அலி நடப்பில் இவ்விவகாரம் நன் முறையில் தீர்வு காண்பதற்கான சாத்தியம் இருப்பதையும் பதிவு செய்தார்.

அதேவேளையில்,அன்மையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் தாம் பதவி ஏற்றவுடன் சிலாங்கூரில் நிலவி வரும் நீர் விவகாரத்திற்கு தீர்வினை ஏற்படுத்த அப்பிரச்னையில் கவனம் செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.