NATIONAL

13 அமைச்சர்களும் 23 துணையமைச்சர்களும் பதவி உறுதிமொழி எடுத்தனர்

2 ஜூலை 2018, 5:09 AM
13 அமைச்சர்களும் 23 துணையமைச்சர்களும் பதவி உறுதிமொழி எடுத்தனர்

சா ஆலாம்,ஜூலை02:

மலேசியாவின் புதிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் 13 அமைச்சர்களும் 23 துணையமைச்சர்களும் இஸ்தானா நெகாராவில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதன் மூலம் அமைசரவையில் இடம் பெறப் போவது யார் எனும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அமைச்சர்களாகவும் துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டவர்கள் மாமன்னர் சுல்தான் மொகமாட் V முன்னிலையில் தங்களின் பதவி உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்களின் விவரங்களை கீழே காணவும்:

அமைச்சர்கள்:

1.டத்தோ சைஃபுடின் அப்துல்லா (வெளியுறவு அமைச்சர்)

2.முகமட் ரிட்சூவான் முகமட் யுனோஸ் (தொழில்முனைவர் மேம்பாடு)

3.டாக்டர் சேவியர் ஜெயகுமார் ( நீர்,நிலம் மற்றும் இயற்கைவளம்)

4.சைய்ட் சாடிக் சைய்ட் அப்துல்லா ( இளைஞர் விளையாட்டுத்துறை)

5.பாரு பியான் ( பொதுப் பணி துறை)

6.திரேசா கோக் ( மூலத்தொழில் அமைச்சர்)

7.டத்தோ சைஃபுடின் நசுட்டின் இஸ்மாயில் ( உள்நாட்டு வாணிகம்,பயனீட்டுத் துறை)

8.டத்தோ டாக்டர் முஜாய்ஹிட் யூசோப் ரஃவா ( சமய விவகாரம் – பிரதமர் துறை)

9.காலீட் அப்துல் சமாட் ( கூட்டரசு பிரதேசம்)

10.டத்தோ லீயூ வெய் கியோங் ( சட்ட விவகாரம் – பிரதமர் துறை)

11.இக்னசியஸ் டேரல் லைய்கிங் ( அனைத்துலக வாணிக தொழில் துறை)

12.டத்தோ முகமட் டின் கெத்தாஃப்பி ( சுற்றுலா,கலை மற்றும் பண்பாடு துறை)

13.யோ பீ யின் ( எரிப்பொருள்,தொழில்நுட்பம்,அறிவியல்,பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை)

துணையமைச்சர்கள்:

1.டத்தோ டாக்டர் சாருடின் முகமட் சாலே ( கூட்டரசு பிரதேசம்)

2.அமிருடின் ஹம்சா ( நிதித்துறை)

3.டத்தோ அஸிஸ் ஜஸ்மான் ( உள்துறை)

4.ஹனா இயோ ( மகளிர்,குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை)

5.தியோ நீ சிங் ( கல்வித்துறை)

6.ஆ.சிவராசா ( புறநகர் மேம்பாட்டுத் துறை)

7.ஹடின் சைஸ்லி ஸித் ( தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை)

8.மாபூஸ் ஓமார் ( மனிதவளத் துறை)

9.சிம் சீ சின் (விவசாயம் மற்றும் விவசாய தொழில்துறை)

10.டாக்டர் லீ பூன் சாய் ( சுகாதாரத் துறை)

11.முகமட் பக்தியார் வான் சிக் (சுற்றுலா,கலை மற்றும் பண்பாட்டுத்துறை)

12.இஸ்நரைய்சா முனிரா மஜ்லிஸ் (தொழில்நுட்பம்,அறிவியல்,பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை)

13.சம்சூல் இஸ்கண்டார் முகமட் ஹக்கின் ( மூலத்தொழில்)

14.ஸ்டீவன் சிம் ( இளைஞர் விளையாட்டுத்துறை)

15.டாக்டர் ஓங் கியான் மிங் ( அனைத்துலக வாணிக தொழில்துறை)

16.சோங் சியான் ஜேங் (உள்துறை,உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டு விவகாரத்துறை)

17.டாக்டர் முகமட் ஹட்டா முகமட் ரம்லி (தொழில்முனைவர் மேம்பாட்டுத்துறை)

18.முகமட் அனுவார் முகமட் தாஹிர் (பொதுப்பணித் துறை)

19.டத்தோ கமாருடின் ஜபார் ( போக்குவரத்து துறை)

20.துங்கு சுல்புரி சா ராஜா புஜி (நீர்,நிலம் மற்றும் இயற்கை வளம்)

21.புஸியா சாலே ( சமய விவகாரம் – பிரதமர் துறை)

22.முகமட் ஹனிபா மைதீன் ( சட்டம் – பிரதமர் துறை)

23.டாக்டர் முகமட் பாரிஃக் ரஃபிக் ( தேசிய ஒற்றுமை மற்றும் சமூக சுபிட்சம் – பிரதமர்துறை)

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.