SELANGOR

தவறு இழைக்கும் குத்தகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம்

29 ஜூன் 2018, 6:30 AM
தவறு இழைக்கும் குத்தகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம்

சா அலாம்,ஜூன்29:

தவறுகளை இழைக்கும் குத்தகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி தெரிவித்தார்.இதில் எவ்வித உடன்பாட்டையும் மாநில அரசு கொண்டிருக்காது என்றும் அவர் கூறினார்.

சா அலாம் மாநகர மன்றத்தை சார்ந்த குப்பை அகற்றும் குத்தகை நிறுவனத்தின் லாரி மோதி சிறுமி ஒருவர் மரணமுற்ற சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த மந்திரி பெசார் இதனை தெரிவித்தார்.அச்சம்பவம் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் சம்மதப்பட்ட குத்தகை நிறுவனத்தை தொடர்புக் கொள்ளப்பட்டு விட்டதாகவும் விசாரணை துரிதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில்,அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் அதன் விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் மந்திரி பெசார் தெரிவித்தார்.சம்மதப்பட்ட குத்தகை நிறுவனம் வெளிநாட்டு ஓட்டுனரையோ அல்லது முறையான பெர்மிட் மற்றும் லைசன்ஸ் போன்ற தவறுகளை செய்திருப்பின் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு ஒருபோதும் தயாங்காது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும்,நேற்றைய இரவு வரை சம்மதப்பட்ட ஓட்டுனர் வெளிநாட்டினர் எனும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறிய மந்திரி பெசார் எம்பிஎஸ்ஏ நியமித்த சம்மதப்பட்ட குத்தகை நிறுவனம் அதன் கடமையினை செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து வருவதாகவும் அவர்கள் மீது புகார்கள் பெரும் அளவில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்த முழு விசாரணையும் அதன் உண்மையும் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமை பெறும் என்றும் இச்சம்பவத்திற்கான காரணமும் விசாரணையில் தெரிய வரும் என்றும் கூறிய மந்திரி பெசார் மரணமுற்ற சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.சம்மதப்பட்ட குத்தகை நிறுவனத்தின் லாரி மோதி ஒன்பது வயது சிறுமியான நோர் ஸ்ரினா டாமியா முகமட் நஸ்ரூல் ரபிஸி மரணமுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.