ஷா ஆலாம்,ஜூன்29:
சிலாங்கூர் மாநிலத்தின் நீர் நிலைப்பாடு மறுசீரமைப்பு மற்றும் அதன் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் நன் நிலையில் சிறந்த இலக்கிற்கு திரும்பும் எனவும் அவை விரைவில் தீர்வு காணும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர் துறை அமைச்சராக நியமனம் செய்யப்படும் வாய்ப்பு உள்ள நிலையில் சிலாங்கூர் மாநிலம் இதுநாள் வரை எதிர்நோக்கி வந்த நீர் சார்ந்த சிக்கல்களுக்கு அஃது நன் தீர்வாக அமையும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
இருப்பினும்,சிலாங்கூரில் நீர் பிரச்னை எதுவும் இல்லை என்றும் நிஜத்தில் சிலாங்கூரில் நடப்பில் நீர் தேவைக்கும் அதிகமாகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.அதனால்,சிலாங்கூர் வாழ் மக்கள் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கு முன்னதாக சிலாங்கூர் மாநிலத்தில் நீர் சார்ந்த சிக்கல்களுக்கு ஜூலையில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் அமிரூடின் சாஹாரி கூறினார்.மேலும்,நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மத்திய அரசை கைப்பற்றியதன் மூலம் இது சாத்தியமே என்றும் அவர் சா அலாம் செத்திய சிட்டி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இவ்வாறு கூறினார்.


