புத்ரா ஜெயா, ஜூன் 25:
நாட்டின் கடனை அடைக்கு உருவாக்கப்பட்ட மலேசிய நம்பிக்கை நிதியம் ( தாபோங் ஹராப்பான் மலேசியா) ஜூன் 25 ஆம் தேதி மாலை மணி 3 வரை ரிம 108,215,946.39 மில்லியனை எட்டியதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
நாட்டின் கடனை அடைக்க மக்கள் காட்டிய அக்கறை மற்றும் உணர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு நிதியம் சிறந்த இலக்கை நோக்கி முன்னேறுவதோடு நாட்டு மக்களின் தேச உணர்வும் தொடர்ந்து மேலோங்கி வருவதாகவும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
இதற்கிடையில்,இத்திட்டம் குறித்து பல்வேறு தரப்பு தங்களின் கருத்துகளை பதிவு செய்த வண்ணம் இருந்தாலும் நாம் இதுவரை ரிம 108.2 மில்லியனை நன்கொடையாக பெற்றிருப்பதாக நிதியமைச்சு உறுதிப் படுத்தியது.


