கோலா லம்பூர், ஜூன் 23:
தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கெராக்கான் கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கட்சியின் மத்திய செயலவை கூட்டத்தில் முழு மனதோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 14-வது பொதுத் தேர்தலில் படுதோல்வியை தொடர்ந்து இம்முடிவு எடுக்க நேரிட்டது என்று தெரிகிறது.
" கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த முடிவு செய்துள்ளது. நாடு தழுவிய அளவில் கட்சி கிளைகளின் தேர்தல்கள் நடக்கும்," என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


