ஷா ஆலாம், ஜூன் 20:
சிலாங்கூர் மாநில நிர்வாகத்தில் துணை மந்திரி பெசார் பதவி தேவையில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். இந்த நடைமுறை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப் படுகிறது என்றார்.
" துணை மந்திரி பெசார் பதவி நமது நிர்வாகத்தில் இல்லை. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பாரம்பரியம் தொடரப்படும்," என்று மாநில தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.
கடந்த 2008-இல் இருந்து சிலாங்கூரில் துணை மந்திரி பெசார் பதவி நியமனம் செய்யப்படவில்லை. அதேபோல், முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் 2014-இல் இந்த நடைமுறையை பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.


