ஷா ஆலாம், ஜூன் 20:
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது என்று மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். இது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்வேறு கூறுகளை சீர்தூக்கி பார்த்த பிறகு முடிவு செய்யப்படும் என்று விவரித்தார்.
" மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப் பட வேண்டும்," என்று மாநில தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இதுவரை 10 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


