ஷா ஆலாம், ஜூன் 20:
சுங்கை துவா சட்ட மன்ற உறுப்பினர் அமிரூடின் ஷாரி தனது மந்திரி பெசார் பணியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ முகமட் அமீன் அமாட் யாஃயா, அமிரூடினை வரவேற்று 21-வது மாடியில் உள்ள மந்திரி பெசார் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
இதனை தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களான டத்தோ தேங் சாங் கிம், டத்தோ அப்துல் ரஷீத் அஸாரி, ஹீ லோய் சான் மற்றும் ஹானிஸா தால்ஹா ஆகியோரை சந்தித்து மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை மேலும் திறன்மிக்க முறையில் செயல்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை தொடர ஆலோசனைகள் கேட்டறிந்தார்.
அமிரூடின் ஷாரி, மத்திய பொருளாதார விவகார அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு பதிலாக புதிய மந்திரி பெசாராக நேற்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



