NATIONAL

அரசாங்க அமைப்புகளின் மறுசீரமைப்பு பரிந்துரைகள்?

19 ஜூன் 2018, 1:57 PM
அரசாங்க  அமைப்புகளின் மறுசீரமைப்பு பரிந்துரைகள்?

கோலா லம்பூர், ஜூன் 19:

அரசாங்க   அமைப்புகளைச்   சீரமைக்கும்   குழு (ஐஆர்சி)  இதுவரை  ஏழு   பரிந்துரைகளை   அரசாங்க   ஆலோசனை  மன்ற(சிஇபி)த்திடம்   சமர்ப்பித்துள்ளது.

இன்று   கோலாலும்பூரில்    அப்பரிந்துரைகள்    குறித்து    இல்ஹாம்   கோபுரத்தில்    சிஇபி-இடம்  விளக்கமளித்த   பின்னர்     செய்தியாளர்களைச்   சந்தித்த   ஐஆர்சி   உறுப்பினர்களில்   ஒருவரான   அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  “     தற்போது ஏழு   பரிந்துரைகள்    சமர்ப்பிக்கப்பட்டுள்ளன”,  என்று   தெரிவித்தார்.

“ஏழு   பரிந்துரைகளும்   ஐஆர்சி   ஏற்கனவே  சிஇபி-இடம்  வழங்கிய  மூன்றாவது     அறிக்கையில்    அடங்கியுள்ளன”,  என  ஐஆர்சி-இன்  இன்னோர்  உறுப்பினரான   மா  வெங்  குவாய்   கூறினார்.

இன்று  கொடுக்கப்பட்டது    நான்காவது     அறிக்கை.   ஐஆர்சி-இன்   இறுதி   அறிக்கை  ஜூலை   15-இல்  ஒப்படைக்கப்படும்    என  மா   கூறினார்.

“இறுதி   அறிக்கைதான்  முழுமையானது.  அதில்   எல்லாப்   பரிந்துரைகளும்  விவரங்களும்   உள்ளிட்டிருக்கும்”,  என்றாரவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.