SUKANKINI

கேரத் பேல், 13-வது முறையாக ரியல் மேட்ரிட் கிண்ணத்தை வெல்வதை உறுதி செய்தார்

27 மே 2018, 1:11 AM
கேரத் பேல், 13-வது முறையாக ரியல் மேட்ரிட் கிண்ணத்தை வெல்வதை உறுதி செய்தார்
கேரத் பேல், 13-வது முறையாக ரியல் மேட்ரிட் கிண்ணத்தை வெல்வதை உறுதி செய்தார்
கேரத் பேல், 13-வது முறையாக ரியல் மேட்ரிட் கிண்ணத்தை வெல்வதை உறுதி செய்தார்

கியிவ், மே 27:

இன்று அதிகாலையில் கியிவ், நேசனல் ஒலிம்பியாஸ்கிவ் அரங்கத்தில் நடைபெற்ற ஐரோப்பா வெற்றியாளர் கிண்ண இறுதி ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் குழு 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி 13-வது தடவையாக வெற்றி பெற்றது. ரியல் மேட்ரிட் அணியின் ஹீரோவாக கேரத் பேல் இரண்டு கோல்களை புகுத்தி வெற்றியை உறுதி படுத்தினார். 61-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய கேரத், ரியல் மேட்ரிட் அணியின் ஆட்டத்தை நிர்வாகி ஜினடீன் ஜிடேன் வியூகத்திற்கு ஏற்ப மாற்றி வெற்றிக்கு வித்திட்டார். லிவர்பூல் நிர்வாகி ஜூர்கன் குலோப்பின் வியூகம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக கேரத் விளங்கினார் என்று கூறினால் அது மிகையாகாது.

முதல் பாதி முழுவதும் லிவர்பூல் தாக்குதல் நடத்தினாலும் ரியல் மேட்ரிட் செர்கியோ ராமோஸ் தலைமையில் தற்காப்பு அரண் செங்கோட்டையாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

லிவர்பூல் தோல்விக்கு கோல் காவலர் லோரிஸ் காரியோஸ் ஒரு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு கோல்களை தனது தவறான முறையில் பந்தை கையாண்டதால் கோட்டை விட்டது லிவர்பூல் ரசிகர்களின் எரிச்சலை ஏற்படுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.