கோலாலம்பூர்,மே11:
நாட்டின் புதிய அரசாங்கம் அதன் 10 முதன்மை மந்திரிகளை நாளை நியமிப்பதோடு அவர்களின் பெயர்களையும் வெளியிடும்.
நாளை நியமிக்கப்படும் அமைச்சரவை முழுமையானதல்ல.மாறாய்,அஃது சிறிய நிலையிலானது என்று நாட்டின் 7வது பிரதமரான துன் மகாதீர் குறிப்பிட்டார்.
எங்களுக்கு பெரியதொரு அமைச்சரவை தேவையில்லை.ஆனால்,அமைச்சரவையை விரைவில் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நிதி அமைச்சர்,உள்துறை அமைச்சு,தற்காப்பு அமைச்சு,கல்வி அமைச்சு உட்பட 10அமைச்சு அதில் அடங்கும் என்றார்.


