NATIONAL

துன் மகாதீர்: பெல்டா வாக்காளர்கள் பாக்காத்தானுக்கு ஆதரவு தர தயாராக உள்ளனர் !!!

22 ஏப்ரல் 2018, 6:11 AM
துன் மகாதீர்: பெல்டா வாக்காளர்கள் பாக்காத்தானுக்கு ஆதரவு தர தயாராக உள்ளனர் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 22:

மலேசிய முழுவதும் அம்னோ தேசிய முன்னணியை எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது என்றும் இதில் பெல்டா வாக்காளர்களும் அடங்கும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அமைப்பு தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் பெல்டா குடியிருப்பாளர்களின் ஆதரவு முன்பைவிட பலமடங்கு அதிகமாக இருக்கிறது என்றார்.

"  இதற்கு முன்பு பெல்டா வாக்காளர்கள் அம்னோ தேசிய முன்னணியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனாலும், பல்வேறு ஊழல்கள் மற்றும் அம்னோ தலைவர்களின் பொறுப்பற்ற செயல்களும் பெல்டா வாக்காளர்களுக்கு நம்பிக்கையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, பெல்டா வாக்காளர்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றனர். பெல்டா பகுதியில் நடக்கும் ஹாராப்பான் சூறாவளி பயண நிகழ்ச்சிகளில்  மக்களின் ஆதரவு அபரீதமாக இருக்கிறது. நேற்று இரவு நடைபெற்ற ஜோஹோல் மற்றும் கோலா பீலா பெல்டா குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிகளில் மக்களின் பேராதரவு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு வெற்றியை தரும்," என்று தமது அகப்பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.