SELANGOR

ஜனநாயக வழிவகைகளில் மகஜர் வழங்குதல் ஒரு பகுதிதான்

18 ஏப்ரல் 2018, 1:10 PM
ஜனநாயக வழிவகைகளில் மகஜர் வழங்குதல் ஒரு பகுதிதான்

ஷா ஆலம், ஏப்ரல் 17:

  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலகத்தின் முன் கூடுதலும் மகஜர் வழங்குதல் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவை பாக்காத்தான் அரசாங்கத்திற்கு ஒன்றும் புதிதல்ல.ஆனால்,அவை ஜனநாயக வழிவகையில் ஒரு அங்கம்தான் என்பதை நாம் வரவேற்கிறோம்.

இதுவரை பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து 50க்கும் மேற்பட்ட எதிர்ப்பு மகஜர்களை பெற்றுள்ளோம்.அவை ஜனநாயகத்தின் உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும்,பெறப்படும் அனைத்து மகஜரும் பதில் அளிக்க சாத்தியமானவை அல்ல.

  மகஜர் வழங்குவோரில் சிலர் இதற்கு முன்னர் நம்மோடு கைகோர்த்து பயணித்தவர்களாகவும் இருக்கலாம்.அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர்கள் நமக்கு எதிராக களமிறங்கியிருக்கலாம்.ஆனால்,ஜனநாயக ரீதியில் அவர்களின் உணர்வுகளுக்கும் மகஜர்களுக்கும் இங்கு மதிப்பளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெறப்படும் ஒவ்வொரு மகஜரும் மந்திரி பெசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்புடையதற்கு மட்டுமே பதில்  அளிக்கப்படுவதாகவும் கூறிய அவர் அரசியல் ரீதியில் எதிர்ப்பு,மாநில அரசை மாசுப்படுத்தும் நோக்க கொண்டவை,அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவை அடங்கிய மகஜர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

சாலை மேம்பாடு அல்லது வீடமைப்பு திட்டங்களுக்காக மக்களின் வீடுகள் உடைப்படும் சம்பவங்கள் நிகழும் போது அது குறித்த நன் தீர்வுகளுக்கு கொஞ்ச கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும்.அதண் உண்மையாக தகவல்களை பெறவும் ஆதாரங்களை திரட்டவும் அது தேவைப்படுகிறது.வியூக அடிப்படையிலும் தொழில்நுட்ப ரீதியிலும் ஆராயப்படுவதோடு அரசியல் நிலையிலான சூழலும் ஆராயப்பட்ட பின்னரே சம்மதப்பட்ட மகஜர்களுக்கு நம்மால் பதில் அளிக்க முடியும் என்றார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.